உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்பட்ட போது ஸ்வீடனில் உள்ள பள்ளி வாயல் ஒன்றுக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான அல்குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை வன்மையாக கண்டிப்பதாக அறிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மற்றவர்களின் உரிமைகளை மதிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கும், மதத்தின் அடிப்படையில் பிளவுகள் மற்றும் வெறுப்புகளை உருவாக்குவதற்கு உரிமம் வழங்காததை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.
தேசிய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நலன் கருதி, சமூகங்களுக்கு இடையே மத சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி வெறுப்பு செயல்களைத் தடுக்க அனைத்து நாடுகளும் தனிநபர்களும் கடமைப்பட்டுள்ளனர் என
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.




No comments:
Post a Comment