Recent Posts

Search This Blog

மர்ம நபர்களும் - மர்ம கேக்கும்... புத்தளம் பிரதேச வீடோன்றில் இடம்பெற்ற அசம்பாவிதம்.

Sunday, 16 July 2023


புத்தளம் நகரிலுள்ள வீடொன்றுக்கு வந்த மர்மநபர்கள் இருவர், வீட்டிலிருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட கேக்கை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரும் மயங்கி விழுந்து நிலையில் அவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


65 வயதுடைய ஆண் மற்றும் அவரது 63 வயது மனைவி, 29 வயது மகள், குறித்த ஆணின் 86 வயது தந்தை மற்றும் 84 வயதான தாயார் ஆகியோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்தளம் அனுராதபுரம் வீதியில் பக்க வீதியொன்றில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு இந்த இனந்தெரியாத மர்மநபர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இவ்வாறு வந்த சந்தேகநபர்கள் இதய சத்திரசிகிச்சைக்கு உள்ளான இந்த வீட்டின் உரிமையாளரிடம் நட்பைக் காட்டி அவரை சில காலமாகத் தெரியும் எனவும் நிதி நிறுவனம் ஒன்றின் மூலம் 50000 ரூபாவை வழங்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் அனைவரும் மயங்கி கிடந்ததை அடுத்து அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் அவர்களை புத்தளம் வைத்தியசாலைக்கு.அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


No comments:

Post a Comment