Recent Posts

Search This Blog

வீதியில் இளநீர் விற்பனைச் செய்துக்கொண்டிருந்த மொஹமட் நலீம் என்பவருக்கு ரூ.10,000 தண்டம் - காரணம் இதுதான் (கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ராபி தீர்ப்பு)

Sunday, 23 July 2023


ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளநீர் விற்பனைச் செய்துக்கொண்டிருந்த வியாபாரி, பகிரங்கமாக மதுபானம் பருகிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கண்டி-மஹியாவ ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலுக்கு அமைய கைது செய்யப்பட்ட நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு கண்டி மேலதிக நீதவான் மொஹமட் ராபி, ரூ.10,000 தண்டம் விதித்தார்.

மஹியாவை பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் நலீம் என்பவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அத்தொகையை செலுத்த தவறின், 6 மாதம் க​டூழிய சிறைத்தண்டனை விதிப்பதற்கும் மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

ஷேன் செனவிரத்ன


No comments:

Post a Comment