Recent Posts

Search This Blog

VIDEO : தீ விபத்துக்குள்ளாகி முற்று முழுதாக எரிந்து சேதமடைந்த தெல்தோட்டை ஜுமனாஸ் பேக்கர்ஸ்.

Tuesday, 6 June 2023


கண்டி - தெல்தோட்டை பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.



குறித்த தீ விபத்து சமையல் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டுள்ளது எனவும், 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததுடன் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட தீ விபத்து தொடர்பில் பேக்கரி உரிமையாளரின் சகோதரர் தெரிவித்த கருத்து

தெல்தோட்டை நகரில் அமைந்திருக்கும் எமது வியாபார நிறுவனம் (ஜுமனாஸ் பேக்கர்ஸ்) #jumanas Bake House நேற்று இரவு ஏற்பட்ட சிறு அசம்பாவிதம் காரணாமாக முற்று முழுதாக சேதமடைந்து விட்டது...


இறைவன் அருளால் உயிர் ஆபத்துக்கள் ஏதும் ஏற்படாமல் அல்லாஹ் பாதுகாத்தான்...


அல் ஹம்துலில்லாஹ்...



இந்த விபத்து ஏற்பட்ட உடன் பாதிக்கப் பட்ட அனைவரையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவும், மேலும் 🔥 தீ பரவி கட்டிடம் சேதமடையாமல் இருக்கவும், தீயை கட்டுபடுத்தவும் அருகில் இருந்து இனம் மதம் மொழி பாராமல் பாடுபட்ட அனைத்து தெல்தோட்டை பிரதேச உறவுகளுக்கும் எமது குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, விடயம் செவியுற்ற அடுத்த வினாடியே தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தவர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்..



இன்ஷா அல்லாஹ் இந்த துயரில் இருந்து மிகவும் அவசரமாக மீண்டு வர எல்லாம் வல்ல இறைவன் உதவி செய்வானாக... ஆமீன்


- Asm Nisthar



No comments:

Post a Comment