அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன் அவர்களால் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி அவர்களுக்கு "ஷேகு ஸ்ரீலங்கா" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புத்தளம் - தில்லையடி முஹாஜிரீன் அரபுக் கல்லூரியின் இரண்டாவது அல் ஆலிம் மற்றும் அல் ஹாஃபிழ் பட்டமளிப்பு விழாவின்போதே அவர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டார்.
இச்சிறப்பு நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன் அவர்கள் கல்லூரி சார்பாக பட்டத்தை வழங்கினார்.
கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் அல் ரஷாதி, புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். எச்.எம். நவவி, புத்தளம் மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபைத் தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், ஹாஜிகளான ஹனீப் பாய், முஹம்மத் நிஸாம் உள்ளிட்ட அதிதிகள் பலர் இச்சிறப்பு நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
*கலாபூஷணம் பரீட் இக்பால் - யாழ்ப்பாணம்*


No comments:
Post a Comment