மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமதி ஜலானி பிரேமதாச அவர்களுக்கு "ஸ்ரீ சுகத சாசன பிரசாதனி" என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டுள்ளது.
சம்புத்த சாசனத்தின் இருப்புக்கும்,அதனை நிலைநிறுத்துவதற்கும் முன்னேற்றுவதற்கும் அவர் ஆற்றிய உன்னத பணியைப் பாராட்டி திருமதி ஜலானி பிரேமதாசவுக்கு இந்த கௌரவ நாமம் வழங்கப்பட்டது.
சங்கைக்ககுரிய மெத்முனிகம சிரிசுமண மகாநாயக்க தேரர்,சங்கைக்ககுரிய கஹத்தேவெல சிறி நிவாச மகாநாயக்க தேரர்,நிந்தானே சந்தவிமல மகாநாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் இந்நிகழ்விற்கு பிரசன்னமாகி இருந்ததோடு,சங்கைக்குரிய மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுடன் "ஸ்ரீ சுகத சாசன பிரசாதனி" கௌரவ நாமத்தின் சன்னஸ் பத்திரம் திருமதி ஜலானி பிரேமதாச அவர்களுக்கு வழங்கி வைக்கப்படது.


No comments:
Post a Comment