Recent Posts

Search This Blog

வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்தார்.

Thursday, 8 June 2023
வடகொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து அந்த நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார். வடகொரியாவில் தற்கொலை செய்து கொள்பவரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40 சதவிகிதம் உயர்ந்துள்ள நிலையில், இந்த உத்தரவை கிம் ஜாங் உன் பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே பல வினோதமான கட்டுப்பாடுகளையும் அடாவடியான உத்தரவுகளையும் விதிக்கும் நாடு வடகொரியா என்பது உலகம் அறிந்தது..

தற்போது அந்நாடு கடுமையான பஞ்சத்தால் தவித்து வருவதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

கடுமையான பசி, பஞ்சத்தால் மக்கள் தவித்து வரும் நிலையில், வடகொரியாவில் மக்கள் தற்கொலை செய்து கொள்வது கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் 40 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக தென்கொரிய உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனால், மக்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என்று கூறியதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்கொலை செய்து கொள்வது சோசலிசத்திற்கு எதிரானது என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம்.



No comments:

Post a Comment