Recent Posts

Search This Blog

உலகக்கோப்பையை வெல்வது இலகுவானது ... ஐ.பி. எல் கோப்பையை வெல்வதே கடினமானது ; கங்குலி

Tuesday, 13 June 2023


 உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய அணியின் மூத்த வீரர்கள் மீதும், கேப்டனான ரோகித் சர்மா ஆகியோரை நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் கடந்த 10 ஆண்டுகளில் 9 முறை ஐசிசி தொடர்களில் மட்டும் இந்திய அணி மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.


இந்த நிலையில் பிசிசிஐ முன்னாள் தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி பேசுகையில்,

கேப்டனாக நியமிக்கப்படும் போது, ஐபிஎல் தொடரில் ரோஹித் ஷர்மா  5 கோப்பைகளை வென்றிருந்தார். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும், டி20 உலகக்கோப்பை அரையிறுதியிலும் தோல்வியை சந்தித்திருந்தோம்.

அதனால் கோப்பைகளை வென்றிருந்த ரோகித் சர்மா சிறந்த வாய்ப்பாக எங்களுக்கு தெரிந்தார். ரோகித் ஷர்மா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றவர்கள் எம்எஸ் தோனியும், ரோகித் ஷர்மாவும் மட்டும் தான்.

உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதை காட்டிலும், ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வது சவாலானது. ஏனென்றால் உலகக்கோப்பைத் தொடரில் 4 முதல் 5 போட்டிகளில் வென்றாலே அரையிறுதி அல்லது இறுதிப்போட்டியில் விளையாடலாம். ஆனால் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிட்டத்தட்ட 17 போட்டிகளில் விளையாடினால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவின் திறமை மீது எந்த சந்தேகமும் இல்லை, அவர் மீது நம்பிக்கை இருக்கிறது என்று ஆதரவு குரல் கொடுத்துள்ளார் சவுரவ் கங்குலி.

அவர் தலைமையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிவரை இந்தியா சென்றுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக நாங்கள் தோல்வியடைந்தோம்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட, நாங்கள் WTC இறுதிப் போட்டியில் தோல்வியை தான் பெற்றிருந்தோம். ஆனால் ரோகித் சர்மா கேப்டன்சியில் டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியை எட்டினோம். எனவே, தேர்வாளர்கள் இந்திய கேப்டன் பணிக்கு சிறந்த நபரைத் தான் தேர்ந்தெடுத்துள்ளனர் ” என்று ஆஜ் தக்கிடம் கங்குலி கூறியுள்ளார்




No comments:

Post a Comment