Recent Posts

Search This Blog

கரய ஆயதததல தகக ஒரவர கல

Friday, 16 June 2023


களுத்துறை, பலாதொட்ட கொடபராகாஹேன பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (16) இரவு ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் வசிக்கும் திருமணமாகாத 43 வயதுடைய சுஜித் தர்மசேன என்ற நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தனது வீட்டுக்கு அருகில் நடந்து சென்ற வேளையிலேயே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகி தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments:

Post a Comment