யாரை குறை சொல்வது?
உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கையில் தற்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான அரசாங்க ஊழியர்கள் உள்ளனர்.
இலங்கையில் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு திணைக்களங்களின் தேவை ஆடிப்படையில் இடம்பெறாமல் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் நிகழ்கிறது.
10 இலட்சம் அரச தொழில் என்று தொடங்கி O/L Pass ஆகாதவனுக்கும் அரச தொழில் என்ற நிலையில் வந்து நிற்கிறது.
22 million மக்களுக்கு 225 பாராளுமன்ற உறுப்பினர்கள். எண்ணிலடங்கா அமைச்சர்கள், ஏனென்றே தெரியாத இராஜாங்க அமைச்சர்கள்.
கடந்த 15 ஆண்டுகளில் அரச தொழிலாளர்கள் இரட்டிப்பாகியுள்ளனர்.
Source: Sunday Times
எந்த விதமான அடிப்படை Situation Analysis இல்லாமல் ஆட்சேர்ப்பு நிகழ்கிறது.
ஒவ்வொரு 14 குடிமக்களுக்கும் ஒரு அரச ஊழியர்.
Sunday Timesஇல் வெளியான 2019இல் நிகழ்ந்த Survey ஒன்றை மேற்கோள் காட்டிய செய்தியின் அடிப்படையில் அரச ஊழியர்களின் செயல்திறன் (efficiency) 30%த்திலும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(இணைப்பை பார்க்கவும்)
//இச்செய்தியின் அடிப்படையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் Hon Mussharraf அவர்களின் 15% என்ற உரை அமைந்திருக்கலாம் என்பது எனது தேடலின் அடிப்படையிலான கணிப்பு//
அரச ஊழியர்களின் சேவையின் வினைத்திறன் (Efficiency) குறைய
பிரதான காரணமாக அமைவது பல அரச நிறுவனங்கள் அளவுக்கதிகமாக ஆளணியை இணைத்துக் கொள்வதாகும்.
பெரும்பாலான அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் (SOEs) அரசியல்வாதிகள் தங்கள் ஆதரவாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒரு குப்பைத் தொட்டியாக மாறியுள்ளன.
Poster ஒட்டியவன், பின்னால ஒட்டி திரிந்தவனுக்கெல்லாம் அரசாங்க தொழில்.
(மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்த கருத்தின்படி, அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையில் (CEB) மாத்திரம் 26,000 ஊழியர்கள் பணிபுரிவதாகவும், இது வெறும் 5,000 ஊழியர்களைக் கொண்டு இயங்கக்கூடிய ஒரு நிறுவனமாகும் என்பதாகும்.)
எமது நாடு விட்ட மிகப்பெரும் தவறு தனியார் துறையை ஊக்குவித்து வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்து தனியார் வேலை வாய்ப்புகளை அதிகரிக்காமை.
இதனால் பட்டதாரியாக வெளியாகும் எல்லோருக்கும் அரச தொழில் தேவை என்ற எண்ணக்கரு விதைக்கப்பட்டுவிட்டது. அதற்கான ஆர்ப்பாட்டங்கள் வேறு.
இங்கு அரச தொழிலை நாட இரு பிரதான காரணங்கள்:
✅ 01. Job Security
✅ 02. Pension
இந்த இரண்டும் தனியார்துறையில் சரியான முறையில் எமது நாட்டில் ஒழுங்குபடுத்தப்படாமை அரச தொழிலை நோக்கி படை எடுக்க பிரதான காரணமாகி வருகின்றன.
பல்கலைக்கழகம் சென்று Degree பெறக்கூடிய பெறுபேறு இருந்தும் உடனடியாக ஆசிரியர் தொழில் கிடைக்கும் என்று College of Education சென்று Diploma செய்யும் எத்தனையோ பேர் எம் கண் முன்னே.
இன்றைய தேதியில் சுகாதாரத் துறை, மற்றும் ஆசியர் துறை (சில பாடங்களுக்கு சில இடங்களுக்கு) என சில துறைகளேலேயே வேலை வாய்ப்புக்கான வெளிப்படையான Vacancyகள் உள்ளன.
பல துறைகளில் பல்கலைக்கழக பட்டதாரியாக வெளியானாலும் இறுதியில் எல்லோருக்கும் ஆசிரியர் Appointment.
இப்போது அது நிரம்பிப் போக Development Officer என்று எல்லா பட்டதாரிகளையும் கொண்டு வந்து பிரதேச செயலகத்துக்குள் அடைத்துவிடுகின்றனர்.
என்ன வேலை? யாருக்கு கீழ் வேலை? ஒன்றுமே தெரியாமல் சிக்கித் தவிக்கின்றனர் பட்டதாரிகள். இருக்க இருக்கை கூட இல்லாமல் சங்கீதக் கதிரை விளையாட்டு விளையாடவேண்டிய பரிதாபம்.
யுனானி வைத்தியர் அத்துறையில் வேலை கிடைக்கவில்லை என்று Development Officer ஆக இணைய வேண்டிய நிலை.
பல துறைகளில் பட்டதாரியாகி Development Officer ஆக அரச சேவையில் இணைந்து அதன் பின் எந்த Developmentஉம் இல்லாமல் Development Officer ஆகவே Pension செல்லும் நிலை.
இது போக Samoorthi Officers வேறு.
பலருக்கு பட்டதாரியாகி அரச சேவையில் இணைந்துவிட்டால் அதுவே ஒரு முட்டுசந்து. எந்த Carrier Developmentஓ , புதிய அறிவை வளர்ப்பது பற்றியோ எந்த அக்கறையுமில்லை. பல அரச நிறுவனங்களை நவீன Digital மயப்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்களும் இத்தகையவர்களே.
அரச சேவையில் வினைத்திறனாக செயற்படாதவர்களை விலக்க வழியுமில்லை. அவ்வாறு செய்யப் போனால் தொழில் சங்கம், அரசியல் ஆதரவு காப்பாற்றிவிடும்.
"அரசாங்கம் இலவச கல்வியை வழங்கி உங்களை பட்டதாரி ஆக்குகிறது. அரசாங்கமே உங்களுக்கு தொழிலையும் தரவேண்டுமா? அதனை நீங்களே தேடிப்பெற வேண்டும்" என்பது நியாயமான வாதமாக இருந்தாலும் முன்னர் சொன்னதுபோல் அதற்கேற்ப தனியார் துறையில் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவில்லை. அரிதாகவே உள்ளன.
ஆக அப்பட்டதாரிகள் அரச தொழில் இல்லாதவிடத்து தமது தகைமைக்கான தொழிலை தேடி வெளிநாடுகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலைமை. நிர்ப்பந்தம்.
இன்று நாட்டில் Engineerஆக வெளியானாலும் அரச தொழில் இல்லை. தனியார் or Semi Government Companyகளில் இணைந்தாலும் அரசின் அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதிகள் நிறுத்தப்பட பலர் வேலை வாய்பை இழந்து குடும்பத்தைப் பிரிந்து மத்திய கிழக்கில் தஞ்சம் புகவேண்டிய நிலைமை.
பல்கலைக்கழக பாடத்திட்டங்களை எடுத்துக்கொண்டால் பல துறைகள் சர்வதேச தொழில் சந்தைக்கு ஏற்புடையதாக இல்லை.
2000 ஆண்டுகளில் Z - Score அறிமுகமாகுமுன் இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம், தமிழ் என இலகுவான பாடங்களை எடுத்து பல்கலைக்கழகம் நுழைந்து பட்டதாரியாகி அரச தொழிலில் இணைந்தோர் எத்தனையோபேர்.
உலகம் Cloud Computing, Artificial Intelligence என்று போய்க்கிட்டு இருக்கு. நாம இன்னும் Arts Facultyக்கு ஆள் அதிகரிப்பது பற்றி பேசிக்கிட்டு இருக்கிறோம்.
கடந்த சில வருடங்களாகத்தான் தொழில்நுட்பம் சார் பாடங்கள் பாடசாலைகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் உள்வாங்கப்படுகின்றன. அவை இன்னும் முன்னேற்றமடைய வேண்டிய தேவை நிறையவே உண்டு.
2021இல் நாட்டின் வரி வருமானத்தில் 81% அரச ஊழியர்களின் மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
(வரி: 1,216 billion, சம்பளம் மற்றும் Pension 1,052 billion) இப்படி போனால் சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்துவது எப்படி?
ஒவ்வொரு ஆண்டும் Budgetஇல் பாதுக்ப்புக்கென்றே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
இலங்கையில் முப்படையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3.5 இலட்சம். இது அரச படையணியில் 20% க்கும் அதிகம். யுத்தம் முடிவடைந்து பல வருடங்களாகியும் Allocationஉம் ஆட்சேர்ப்பும் குறைந்தபாடில்லை. (ஆளே இல்லாத கடைக்கு யாருக்குயா Tea ஆத்துற?)
அரச சேவை வினைத்திறன் குறைவாக உள்ளது (30%) அதனை மேம்படுத்தவேண்டும் என்ற புள்ளிவிபரங்களோடு வந்தவர்தான் முன்னாள் ஜனாதிபதி கோத்தா.
(இணைப்பை பார்க்க.)
வந்த வேகத்திலையே வீட்டுக்கொரு அரச தொழில் என்று O/L Pass ஆகாத ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று பிரதேச செயலகங்களில் Interviewஉம் நடந்தது. அதில் கலந்து கொண்ட நண்பர் ஒருவர் ஏனைய தகைமைகள் இருந்தும் O/L Pass என்ற பெறுபேறு இருந்த காரணத்தால் நிராகரிக்கப்பட்டார்.
அன்று அவன் சொன்ன "Oபாய் O/L Pass ஆனது ஒரு குற்றமாடா?" என்ற வசனம் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
#ZiyadAia
நாட்டின் விலைவாசி விண்ணைத்தொட அரச சேவையில் உள்ளவர்களின் சம்பளம் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் திண்டாட வைக்கிறது.
அரசாங்கமும் கையறு நிலையில் உள்ளது.
IMFஇடம் போனால் அதன் பிரதான Conditionஏ அரச செலவினத்தை 30% ஆல் குறைப்பது. ஒன்றில் ஆளணியை குறைக்க வேண்டும் or சம்பளத்தைக் குறைக்க வேண்டும். இதில் எதை செய்தாலும் தொழில் சங்கங்கள் கொந்தளிக்கும். ஏற்கனவே கொடுக்கும் சம்பளம் விலைவாசியை சமாளிக்க போதாமல் இருக்கும்போது இது சாத்தியமே இல்லை.
அங்கால அரசியல்வாதிகளின் அநாவசிய செலவுகளை குறைக்கவோ, கொள்ளையடித்ததை மீளப்பெறவோ எந்த செயல் திட்டங்களும் இல்லை.
அதனால் அரசு கொண்டுவந்த ஒரு தீர்வு / சலுகைதான் Seniorityயை பேணி(?), தொடர்தேச்சையான 5 வருட Nopay Leave வழங்கி அரச ஊழியர்களை வெளிநாடு சென்று உழைத்துவர ஊக்குவிப்பது.
இது எப்போதோ செய்திருக்க வேண்டியது. இது பல அரச ஊழியர்களை பட்டப்படிப்பின் பின்னும் தமது தகைமையை மேம்படுத்த இது ஊக்குவித்திருக்கும்.
ஆனால் கிணறு வெட்ட பூதம் வெளியான கதையாய் நிறைய வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.
(சொன்னா கேளு மச்சான் அந்த No Pay Leave உனக்காக கொண்டு வந்தது இல்லடா?)
No pay மறுக்கப்படுமிடத்து தொழிலைவிட்டுவிட்டே நாட்டை விட்டு குடிபெயர்கின்றனர். இது சுகாதாரத் துறையில் இன்னும் பல சிக்கல்களை உருவாக்குகிறது.
ஆக,
மாறி , மாறி ஆட்சி செய்த அரசுகள்
✅ அரச சேவையில் முறையற்ற மற்றும் அளவுக்கதிகமான ஆட்சேர்ப்பு செய்தமை,
✅ தனியார்துறை வேலைவாய்ப்புகள் ஊக்குவிக்கப்படாமை,
✅ உள்நாட்டு , வெளிநாட்டு தொழில் சந்தையை இலக்காகக் கொண்ட பல்கலைக்கழக பாட விதானம் மற்றும் இட ஒதுக்கீடு இன்மை.
✅ Job Security என்ற தைரியத்தில் சோம்பேறிகளான, சேவை நோக்கற்ற , திறமையை வளர்த்துக் கொள்ளாத அரச ஊழியர்கள்.
போன்ற பல காரணங்களால் இலங்கையின் அரச சேவை வினைத்திறன் (efficacy) அற்று காணப்படுகிறது.
By: Dr Ziyad Aia
இணைப்பு:
01. நாட்டின் அரச சேவையின் வினைத்திறன் 30%இலும் குறைவு என மேற்கோள் காட்டி ஜனாதிபதி கோத்தபாயவின் 2020இல் வெளிவந்த உரை.
02. அதிக அரச ஆளணி & 30% அரச செலவினங்களை குறைக்க IMF நிபந்தனை பற்றிய செய்தி:
03. Excess burden of public sector inefficiency



No comments:
Post a Comment