Recent Posts

Search This Blog

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய யோசனை.

Sunday, 11 June 2023


உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.


மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த ஆலோசனை குழுவில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இது தொடர்பான யோசனையை முன்வைத்திருந்ததாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment