பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் இடத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஐந்தாயிரம் ரூபாயும், வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25 ஆயிரம் ரூபாயும் இடைத் தரகர்களால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5 நபர்களை பொலிஸார் கைது செய்தனர். அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, கடந்த மே 30ஆம் திகதி இரவு தமது தேவைக்கு அல்லாது குறித்த பகுதியில் பணத்திற்காக வரிசையில் நின்றோர்,
சந்தேகத்திற்கிடமான முறையில் குறித்த காரியாலயம் முன்பாக ஒன்று கூடி நின்றோர் என 10 நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தரைமயும் குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment