Recent Posts

Search This Blog

டிப்பருடன் மோதிய முச்சக்கரவண்டி - தந்தை ( 40 வயது ) தாயார் ( 39 வயது) மகன் (13) உயிரிழந்த சோகம்.

Sunday, 11 June 2023


துல்கிரிய பிரதேசத்தில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, துல்கிரிய பிரதேசத்தில் எதிர்த்திசையில் பயணித்த ரிப்பர் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தையடுத்து ரிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வறக்காப்பொல வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment