Recent Posts

Search This Blog

ஐந்து நாட்களாக பொலிஸார் மற்றும் உறவினர்கள் இணைந்து தேடுதல் தொடர்கிறது - காணாமல் போன பெண் பாத்திமா முனவ்வராவை இதுவரை காணவில்லை.

Thursday, 11 May 2023

 


பணியாற்றும் நிலையத்துக்கு செல்வதற்காக வீட்டிருந்து புறப்பட்டு 100 மீற்றர் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்த யுவதியை, கடந்த ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.


அந்த யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை பொலிஸார் இணைந்து தேடிவருகின்றனர்.


எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா ஜின்னா  என்ற ​யுவதியே காணாமல் போயுள்ளார்.


அந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என அந்த யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.


வீட்டிலிருந்து பயணவைத்து நடந்துச் செல்லும் காட்சி, எல்பிட்டிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் இறுதியாக பதிவாகியுள்ளது. அவ்விடத்துக்கு அப்பால் இருக்கும் எந்தவொரு கமெராக்களிலும் அந்தக் காட்சி பதிவாகவில்லை. அவரை கண்டவர்கள் யாரும் இல்லையெனவும் சகோதரன் தெரிவித்துள்ளார்.


  பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்றும், தன்னுடனும் வேறு எவருடனும் எவ்விதமான மனஸ்தாபங்களும் இல்லையென்றும் அந்த யுவதியின் தாய் சின்னி சாஹிரா தெரிவித்தார். 

Munawwara Jinnah
வயது - 22
முகவரி - 170/5, mosque road,
Weligalla, Elpitiya.
தொலைபேசி இலக்கம்: 0776512175

தயவு செய்து விபரம் தெரிந்தவர்கள் அல்லது இச் சகோதரியை எவரேனும் கண்டு இருந்தால் கீழ் காணும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு உறனினர்கள் கேட்டுக்கொள்கின்றனர்..


தொடர்புகளுக்கு
சகோதரர்:
Jamseer - 0767404860
Imran - 0763302998
Irshad - 0784618111

தகவல் - சகோதரர் இர்ஷாத்


No comments:

Post a Comment