Recent Posts

Search This Blog

நேற்று மாலை ஆண்களுடன் விடுதி ஒன்றுக்கு சென்ற இளம் பெண் இன்று காலை விடுதிக்கு பின்புறம் நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு - பொலிஸார் விசாரணை.

Sunday, 7 May 2023


களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் மார்கத்துக்கு அருகில் நேற்று (6) நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.



உயிரிழந்தவர் களுத்துறை - நாகொட பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



உயிரிழந்த யுவதி நேற்று மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் குறித்த விடுதிக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் விடுதியில் இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளனர்.



அதில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் விடுதியை விட்டு வெளியேறியதாகவும் அதன் பின்னர் யுவதியுடன் இருந்த மற்றைய இளைஞரும் வெளியேறியதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



அதன் பின்னர், விடுதிக்கு பின்னால் உள்ள ரயில் பாதைக்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இந்தக் குழுவில் உள்ள மற்றைய ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த யுவதியுடன் இருந்த இளைஞனைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment