Recent Posts

Search This Blog

இளைஞன் ஒருவனை விரட்டி விரட்டி கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவம்...

Wednesday, 31 May 2023


பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாளால் தாக்கப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளார்.

அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


No comments:

Post a Comment