Recent Posts

Search This Blog

திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பெளத்த தேரர்களினது பாத யாத்திரை தொடர்பில் போலியான பரப்புரைகளை நம்ப வேண்டாம் என கோரிக்கை.

Wednesday, 10 May 2023


ஹஸ்பர்_

எதிர்வரும் 14 ம்திகதி திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கி ஆரம்பிக்கவுள்ள தாய்லாந்து பெளத்த தேரர்களினது பாத யாத்திரை ( உபசம்பதா) தொடர்பான உண்மை நிலவரம்.


தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை நினைவுகூறும் நோக்கில் எதிர்வரும் 14 ம் திகதி திருகோணமலையிலிருந்து கண்டி நோக்கிய பாத யாத்திரை நடைபெற உள்ளது.


இப்பாத யாத்திரையில் தாய்லாந்து நாட்டைச்சேர்ந்த 50 க்கு மேற்பட்ட பெளத்த தேர ர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது நடைபெறவுள்ளது.

1753 ம் ஆண்டு இலங்கையின் மன்னராக இருந்த கீர்த்தி சிறி இராஜசிங்க மன்னன் இலங்கையில் உபசம்பதா நிகழ்வை மீள கொண்டுவரும் நோக்கில் தாயலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பெளத்த தேரர்கள்( உபாலி தேரர் தலைமையிலான தூதுக்குழுவினர்) முதன் முதலில் தடம்பதித்த இடமாக திருகோணமலை காணப்படுகின்றது. வந்த தூதுக்குழுவினரை மன்னனின் பிரதிநிதிகள் வரவேற்ற இடமாக அமையப்பெறும் இடமாக காணப்படுவது நெல்சன் தியேட்டருக்கு முன்னால் அமையப்பெற்ற 04 அரச மரங்கள் கொண்ட தொல்லியல் இடமாக காணப்படுகின்றது.

குறித்த வரலாற்று நிகழ்வை நினைவுகூறும் நோக்கில் குறித்த இடத்தில் பிரித்( பெளத்த மத ஆசீர்வாதம்) நிகழ்வொன்று குறித்த தினம் அந்த தொல்லியல் இடத்தில் நடைபெற்று ( அண்ணளவாக ஒரு மணிநேரம்) அந்நிகழ்வு நிறைவுக்கு வருவதுடன் அதனைத்தொடர்ந்து தேரர்கள் அடங்கிய குழுவினர் பாத யாத்திரை மூலம் கண்டி நோக்கி புறப்படுவர். இப்பாத யாத்திரை 10 நாட்கள் கொண்டதாகும்.

இது குறித்து கலந்துரையாடும் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் பெளத்த தேரர்கள் , சர்வமத தலைவர்கள், சிவிலமைப்பு பிரதிநிதிகள் மற்றும் துறை சார் அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வு நடைபெறும் நோக்கம் குறித்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் தெளிவாக எடுத்துரைத்ததுடன் குறித்த சர்வதேச நிகழ்வை சிறப்பாக நடாத்த ஒத்துழைப்பை வழங்குமாறும் வேண்டிக்கொண்டார்.
அதன்போது கலந்து கொண்ட சிறீ பத்ரகாளி அம்மன் ஆலய பிரதம குருக்கள் உள்ளிட்ட சக மத தலைவர்கள் மற்றும் சிவிலமைப்பு பிரதிநிதிகளும் குறித்த நிகழ்வு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன் அரசாங்க அதிபர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கெளரவத்துடனான அழைப்பையும் விடுத்தார்.

இருப்பினும் இந்நிகழ்வு குறித்து ஒரு சிலர் போலியான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் பெளத்த சிலையை நிரந்தரமாக வைக்க திட்டம் தீட்டப்படுவதாக கூறியே அப்பரப்புரைகள் முன்னெடுக்கப்படுவதாக அறியக்கிடக்கின்றது. மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டம் உண்மைக்கு புறம்பானது எனவும் தகவல் மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் பெளத்த சிலையோ வேறு நிர்மாணிப்புக்கோளா வைக்கப்பட போவதில்லை எனவும் சமய ஆசீர்வாதம் மாத்திரமே நடைபெறவுள்ளது என்பதனை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சர்வ மத தலைவர்களும் இந்நிகழ்விலே கலந்து கொள்ளவுள்ளனர். எனவே மக்கள் போலி பரப்புரைகளை நம்ப வேண்டாம் என அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டிக்கொள்கின்றார்.

எனவே குறித்த நிகழ்வு குறித்த போலியான பரப்புரைகளை நம்பாமல் மக்கள் இந்நிகழ்வின் உண்மைத்தன்மையை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இதனை பொறுப்பு வாய்ந்த ஊடகப்பிரிவு என்றடிப்படையில் வெளிக்கொணர்கின்றோம் என மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
--
Hasfar A Haleem BSW (Hons)
Journalist




No comments:

Post a Comment