
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இணைந்து தனது எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்னாண்டோவுடன் பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் பீ.ஹரிசன், கட்சியின் உப தலைவர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்து அனைத்து பதவிகளிலும் இருந்து விலகுவதாகவும் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், பொருளாதார நெருக்கடியின் போது அரசாங்கத்தை நிறுவும் சவாலை ஏற்றுக்கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்சித்துள்ளார்.


No comments:
Post a Comment