மீகொடவில் ஆடம்பர மூன்று மாடி வீடு ஒன்றிலிருந்து சுமார் 35 கோடி ரூபா பெறுமதியான நீலக்கல் (இரத்தினம்) மற்றும் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிகப் பெறுமதியான நீலக்கல், 15 இலட்சம் ரூபா பெறுமதியான ரோலக்ஸ் கைக்கடிகாரம், டைட்டன் பெண்கள் கைக்கடிகாரம், 6 தங்க மோதிரங்கள், தங்க வளையல், வெள்ளி மோதிரம் ஆகியவை திருடப்பட்டுள்ளவற்றில் அடங்குமென பொலிஸார் கூறினர்.
கடந்த 5 ஆம் திகதி வர்த்தகர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கொட்டாவ பிரதேசத்தில் உள்ள விஹாரை ஒன்றுக்கு அன்னதானத்தில் பங்கு கொண்டு பின்னர் கொழும்பு பிரதேசத்தில் உள்ள நெருங்கிய உறவினர் வீட்டில் சில மணித்தியாலங்களை செலவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிச் சென்று பார்த்தபோதே இவைகள் திருடப்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment