Recent Posts

Search This Blog

இலங்கைக்கு 1.8 மில்லியன் அமேரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் அன்பளிப்பாக வழங்கியது ஈரான்.

Monday, 8 May 2023


(அஷ்ரப் ஏ சமத்)

ஈரான் அரசாங்கம் 1.8 மில்லியன் அமேரிக்க டொலர் பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள் உட்பட இலங்கைக்கு உதவியாக வழங்கியது.


இம்மருந்துப் பொருட்களை ஈரான் நாட்டுத்துாதுவர் ஹசாம் அஸ்ஜாசதா அவர்கள் சுகாதார அமைச்சில் வைத்து சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெலவிடம் கையளித்தனர்.


இவ் வைபவத்தில் சுகாதார அமைச்சர்,
இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடுகள் நிலவும் இக் காலகட்டத்தில் ஈரான் அன்பளிப்பாக வழங்கிய மருந்துப் பொருடகளுக்கு தனது நன்றிகளைத் ஈரான் துாதுவருக்கு தெரிவித்துக் கொண்டார்.


IRAN GOVERNMENT GRANT OF CANCER DRUGS WORHT $ 1.8 Million to SRI LANKA

(Ashraff.A.Samad)
The Iranian embassy in Sri Lanka has handed over a grant of essential medicines worth $1.8 million, including cancer drugs, says Sri Lankan Health Minister – Kehelaiya Rambukwella.
“H.E. Hashem Ashjazedah expressed Iran’s friendship with this gift as a statement of solidarity in this difficult time,” the minister adds, expressing his gratitude for the grant.


No comments:

Post a Comment