Recent Posts

Search This Blog

I நடுவீதியில் வைத்து மனைவிக்கு கத்திக் குத்து #கம்பளை, மரியாவத்த

Thursday, 27 April 2023
கணவன் தனது மனைவியை பிரதான வீதியில் வைத்து கத்தியால் குத்திய சம்பவமொன்று கம்பளை, மரியாவத்த, கொஸ்கொல் பகுதியில் வியாழக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடைய சமந்தி இனோக்கா, இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த கணவன், மனைவியின்
தலை முடியை பிடித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.


படுகாயமடைந்த அந்தப் பெண், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குடும்பத் தகராறு
காரணமாக ஆறு
மாதங்களாக இவர்கள்
பிரிந்து வாழ்ந்து
வந்துள்ளனர் எனத்
தெரிவித்த பொலிஸார்,
தப்பியோடியவரை தேடி
வலை விரித்துள்ளனர


No comments:

Post a Comment