Recent Posts

Search This Blog

I

Saturday, 1 April 2023
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற ஐக்கிய குடியரசு முன்னணி என்ற புதிய அரசியல் கட்சி மே மாதம் மூன்றாம் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என 43வது பிரிவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க பதுளையில் (1) தெரிவித்தார்.

பதுளை வெலிகம ஹோட்டலில் நடைபெற்ற 43ஆவது பிரிவின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரணவக்க புதிய கட்சி தொடர்பில் வெளிப்படுத்தினார்.

நாட்டை வறுமையில் இருந்து விடுவிக்க தகுதி அடிப்படையிலான அரசியல் தேவை என்றும் குடும்ப வாரிசு மூலம் நாட்டை ஆளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் ஊழல் பணத்தால் வெற்றி பெறும் அரசியலை மாற்ற வேண்டும். காலாவதியான சோசலிச மற்றும் முதலாளித்துவக் கருத்துக்களுக்குப் பதிலாக நடைமுறை வாதத்தின் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி நகர்த்தும் அரசியல் இயக்கம் இன்று தேவையாக உள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணி  என்ற பெயரில் மே மாதம் வெளியிடுவோம்.

இதற்காக பல்வேறு நபர்கள் மற்றும் குழுக்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும்  ரணவக்க குறிப்பிட்டுள்ளார்


No comments:

Post a Comment