Recent Posts

Search This Blog

ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை சீர்குலைப்பவர்களுக்கு எச்சரிக்கை .

Sunday, 9 April 2023


இம்முறை சித்திரைப் புத்தாண்டை மக்கள் கொண்டாட முடிந்தமைக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



சுதந்திரத்தின் பின்னர் நாடு பிளவுகள் மற்றும் பல்வேறு சித்தாந்தங்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், ஒரு கும்பலால் வங்குரோத்து செய்யப்பட்ட நாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.



ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு முழு இலங்கை மக்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும், வேறு விடயங்களைச் செய்து வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அதற்கு அக்குழுக்களே பொறுப்பேற்க வேண்டுமெனவும் வஜிர அபவர்தன தெரிவித்துள்ளார்


No comments:

Post a Comment