Recent Posts

Search This Blog

அனுமதி வழங்க மறுத்த கணவனை, உறங்கிக் கொண்டிருந்த போது கழுத்தை நெரித்து கொன்ற மனைவி. #இலங்கை

Monday, 10 April 2023


உறவினர் வீடொன்றில் நிகழ்ந்த புண்ணிய தானத்திற்கு செல்ல ,கணவன் அனுமதி வழங்காததால் தூக்கத்திலேயே கணவனை மனைவி கொன்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.



வலப்பனை-பாலுகெதர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.



கணவரை கொன்ற மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.



இந்த கொலைச் சம்பவம் நேற்று (08) இடம்பெற்றுள்ளதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வலப்பனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



உயிரிழந்தவர் 44 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவர் உறங்கிக் கொண்டிருந்த போது மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment