Recent Posts

Search This Blog

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு.

Friday, 14 April 2023


கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.



குறித்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.



விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.



சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments:

Post a Comment