Recent Posts

Search This Blog

எதிர்காலத்தில் முட்டை ஒன்றை 25 அல்லது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யமுடியும் ; முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிப்பு

Tuesday, 18 April 2023


தற்போதைய விலையிலும் குறைந்த விலையில் முட்டைகளை மே 1ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு விற்பனை செய்யமுடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் முட்டையின் விலை இன்னும் குறையும். எதிர்வரும் டிசெம்பர் மாதமளவில் முட்டை ஒன்றை 25 அல்லது 30 ரூபாய்க்கு விற்பனை செய்யமுடியுமென அந்தச் சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில்,
பண்டிகை காலங்களில்
ஆகக்கூடுதலான விலைக்கு
முட்டையை விற்பனை
செய்த 700 வர்த்தகர்களுக்கு
எதிராக வழக்குத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது என
நுகர்வோர் அதிகார சபை
தெரிவித்துள்ளது.

அத்துடன், 6,000 சிறிய
சுற்றிவளைப்புத் தேடுதல்கள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன
என அந்த அதிகார சபையின்
தலைவர் ஷாந்த கிரியெல்ல
தெரிவித்தார்.


No comments:

Post a Comment