Recent Posts

Search This Blog

எரிபொருள் விலையில் மக்களுக்கு நிவாரணம்.

Sunday, 12 March 2023


அடுத்த மாதம் இடம்பெறவுள்ள எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது எரிசக்தி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், எரிபொருள் இறக்குமதியில் கிடைக்கும் நிவாரணம் அதற்கேற்ப மக்களுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ள எரிபொருள் விலைத் திருத்தத்தில் எரிபொருள் விலையை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment