Recent Posts

Search This Blog

இரண்டு இளம் பிள்ளைகளையும் மனைவியையும் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்த தந்தை : இன்று காலை சோக நிகழ்வு

Tuesday, 7 March 2023


வவுனியா குட்ஷெட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.



இன்று (07) காலை சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.



தந்தையே இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.



தந்தைக்கு 41 வயதும், தாயாருக்கு 36 வயதும், உயிரிழந்த மகள்களுக்கு 9 மற்றும் 3 வயது என்றும் தெரியவந்துள்ளது.



இரண்டு குழந்தைகளின் சடலங்கள் வீட்டில் இரண்டு நாற்காலிகளிலும், மனைவியின் சடலம் படுக்கையறையிலும் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் வயது42, வீட்டின் முன்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி வயது36, இரு பிள்ளைகளான கௌ. மைத்ரா (வயது9) கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


No comments:

Post a Comment