Recent Posts

Search This Blog

புதியதோர் புத்தளத்தை உருவாக்குவோம் -

Monday, 6 March 2023


அஸ்ஸலாமு அலைக்கும்.

அல்ஹம்துலில்லாஹ், எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

"புத்தளத்தை மீண்டெழச்செய்வோம் வாரீர்" என்ற தலைப்பில் போதை சம்மந்தமான விழிப்புணர்வு நிகழ்வொன்று புத்தளம் நகரசபை மற்றும் புத்தளம் பெரிய பள்ளியின் ஒத்துழைப்புடன் லகூன் அமைப்பின் ஏற்பாட்டில் 04.03.2023 சனிக்கிழமை புத்தளம் பெரிய பள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டு அல்லாஹ்வின் துணையுடன் நன்றே நடைபெற்று முடிந்தது.

இதில் புதியதோர் புத்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என்று பலர் கலந்து பயன் பெற்றனர்.

எமது நோக்கம் ஐஸ் எனும் போதையில் சீரழியும் நம் மக்களை நம் கரங்களை கொண்டு மீட்டெடுக்கும் முயற்சி. நாம் ஒன்றுபட்டால் இதை மிக சிறப்பாக அல்லாஹ்வின் துணையுடன் செய்யமுடியும். போதையற்ற புத்தளத்தை நம் பிள்ளைகளுக்காக உருவாக்க எம்முடன் கைகோர்த்து அவர்களின் வருங்கால வாழ்கையில் சரி போதையற்ற புதியதோர் புத்தளத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையினை உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்!!

Lagoon Team புத்தளம்
+94 77 116 3863
lagoonteam@yahoo.com








No comments:

Post a Comment