Recent Posts

Search This Blog

கழிவறை கொமட் ஒன்றை திருடியவருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனை.

Saturday, 11 March 2023


கழிவறை கொமட் (commode) ஒன்றைத் திருடியதாகவும், திருடப்பட்ட பொருட்களை வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும் ரூ. 3,000 அபராதமும் காலி பிரதான நீதவான் இசுரு நெட்டிகுமாரவினால் விதிக்கப்பட்டது.

அபராதத்தை செலுத்த தவறியதால் மேலும் 6 மாத கால சிறைத்தண்டணை விதிக்கப்பட்டள்ளது

ரத்கமவில் வசிக்கும் 37 வயதான தொம்மதுர சுதி புஷ்பகுமார என்ற நபரே குறித்த குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார்

ரத்கம பிரதேசத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட கொமோட்டை, வேறு இடத்தில் பொருத்துவதற்காக கழற்றப்பட்ட நிலையில், சந்தேகநபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.



No comments:

Post a Comment