Recent Posts

Search This Blog

இன்றைய தினம் மேக மூட்டம் மற்றும் மழையுடனான வானிலை..

Thursday, 9 March 2023


நாட்டின் தென் அரைப்பிராந்தியத்தில் வானம் முகில் செறிந்து காணப்படும்.

சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில்
****************************
கொழும்பு தொடக்கம் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

காலி தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 45 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.


No comments:

Post a Comment