Recent Posts

Search This Blog

கோடீஸ்வர வர்த்தகரை படுகொலைச் செய்த குற்றத்தில் கைதான ஜோடிக்கு ( இன்ஷாப்டீன் - பாத்திமா பஸ்லின்) விளக்கமறியல்.

Tuesday, 7 February 2023


தலங்கம பிரதேசத்தில் மூன்று மாடிகளைக் கொண்ட வீட்டுக்குள் வைத்து கோடீஸ்வர வர்த்தகரை படுகொலைச் செய்து, நீச்சல் தடாகத்தில் தள்ளிவிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

கணவன், மனைவியான இவ்விருவரும், கடுவலை நீதவான் ஷாமீர் விஜேபண்டார முன்னிலையில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்டனர். அவ்விருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணிடம், மனித படுகொலை தொடர்பிலான தகவல்களை மறைத்து, சாட்சிகளை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் இன்னும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதால், சந்தேநபரை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தில் பொலிஸார் கோரிக்கை விடுத்தனர்.

முதலாவது சந்தேநபரின் சாட்சியின் பிரகாரம், கோடீஸ்வர வர்த்தகரை படுகொலைச் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட உருளை கம்பை, பொலிஸார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.



No comments:

Post a Comment