J.F.காமிலா பேகம்
ஷேட்ஸ் (Shades) வியாபார நிறுவனத்தின் உரிமையாளர்
ரொஷான் வன்னிநாயக்க என்பவரை, கடந்த 30 ம் திகதி கொலை செய்த குற்றச்சாட்டில், சந்தேகத்தின் பெயரில் நேற்று(5 )ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தம்பதியினரின் உறவினர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இக்கொலையை தானே செய்ததாக கைது செய்யப்பட்ட தம்பதியில், கணவரான அஸீம்டீன் இன்ஷாப்டீன் (27) என்பவர் பொலிஸ் விசாரணையில் ஒத்துக்கொண்டுள்ளார்.
இக்கொலை பத்தரமுல்லை பெலவத்தை யில் உள்ள ஷேட்ஸ் வியாபார நிறுவன உரிமையாளரின் 2ம் மாடியிலுள்ள நீச்சல் தடாகத்திலேயே இடம்பெற்றிருந்தது.
கொலைச்சந்தேக நபரின் மனைவியான பாத்திமா பஸ்லின்(23) கொலை நடந்த வீட்டில் அச்சந்தர்ப்பத்தில் இருக்கவில்லை.
ஆயினும் கணவர் கொலை செய்த பின் வெளிநாடொன்றிட்கு தப்பிச்செல்ல முற்பட்டபோது, மனைவியும் கூடவே செல்ல முயற்சித்திருக்கிறார்.
அது குழப்பமான நிலையில், வெளிநாடு செல்ல முடியாது போயுள்ளது.
இத்தம்பதியினர் இந்தோனேசியா செல்ல 2 டிக்கட் எடுத்திருப்பினும் பயணத்துக்காக முயற்சித்த விசா மற்றும் ஆவணங்கள்,அடையாள அட்டை முரண்பட்டமையால் , கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து திரும்ப வேண்டிய சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளனர்.
பின்னர் பொலிசாரிடமிருந்து தப்புவதற்காக உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளதுடன், பல இடங்களில் தங்கி ஒளிந்துள்ளனர்.
5ம் திகதி கடவத்தையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
பொலிஸ் விசாரணயின் போது சந்தேக நபரான அஸீம்டீன் இன்ஷாப்டீன் ஓரினச்சேர்க்கை சம்பந்தப்பட்ட செயலி (App) யூடாக வியாபாரியான ரொஷான் வன்னிநாயக்க, தொடர்பு கொண்டு தன்னை அழைத்ததாகவும், அதன்படி "கொன்டம்"உறைகளை வாங்கி குறித்த விலாசத்துக்கு முதல் தடவையாக சென்றதாகவும் அவ்வியாபாரியை அன்றுதான் அறிமுகமானதாகவும், 2 மணித்தியாலங்கள் அங்கு ஒன்றாக தங்கியிருந்த வேளையில் சந்தேக நபர் அதற்கான பணத்தை கேட்டபோது, வியாபாரி தர மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏற்பட்ட சண்டை, கொலையில் முடிந்ததாக பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர் கூறிய விபரங்களின்படி, இருவரும் நீச்சல் தடாகத்தில் இறங்கிய நிலையில், தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபா தேவை என வியாபாரியிடம் கேட்டபோது, தன்னிடம் அவ்வளவு இல்லையென்றும் பணப்பேர்ஸிலிருந்து எவ்வளவாவது பின்னர் தருகிறேன் என கூறியதையடுத்து ஏற்பட்ட
தகராரிலேயே பொல்லொன்றை எடுத்து வியாபாரியை 2தடவை தலையில் தாக்கியபோது, தனது கையை முறுக்கியதால் தான் தாக்கி, எழும்ப முற்சித்தாலும் முடியாது அவ்விடத்திலேயே வியாபாரியான ரொஷான் விழுந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தான் அவரை நீச்சல் தாடாகத்தில் இழுத்து போட்டுவிட்டு, அவரிமிருந்த பேர்ஸ் , பேக் எல்லாவற்றையுயயும் எடுத்துக்கொண்டு வியாபாரியின் வாகனத்திலேயே கொலன்னாவைக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.
தான் கொலை செய்யும் நோக்கத்துடன் முதலில் செல்லவில்லை என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மனைவியிடன் பெரிய பிரச்சனையில் மாட்டிக்கொண்டதாகவும், அவசரமாக கொஞ்சநாளைக்கு வெளிநாட்டில்லிருக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மனைவியான பாத்திமா பஸ்லினா கொலன்னாவை-சாலமுல்லையை வசிப்பிடமாக கொண்டவர்.
கொலைச்சந்தேக நபர் நாரஹென்பிட்டி தபரே மாவத்தையை சேர்ந்தவர் எனினும் கொலை நடைபெறும் போது சாலமுல்லையிலேயே வசித்து வந்துள்ளனர்.
அங்கிருந்தே வெளிநாடு செல்ல வெளியேறியுள்ளனர்.
வெளிநாடு செல்வதற்கு கொலை செய்யப்பட்ட வியாபாரியின் கிரடிட் காட் மூலமே 9 லட்சம் பெறுமதியான 2விமான டிக்கட்களை வாங்கியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் போது வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமமாக வாகனத்தை நீர்கொழும்பு கராஜில் விட்டுவிட்டு, பஸ்ஸில் குகுரானை சந்திக்கு வந்து அங்கிருந்து முச்சக்ககர வண்டி மூலம் கட்டுநாயக்க வந்துள்ளனர்.
2018 ம் ஆண்டு இந்தோனேசிய பாலி தீவிற்கு போய் வந்த பழக்கத்திலேயே அங்கு செல்வதற்கு முய்ற்சித்துள்ளனர்.
உரிய விசா ஆவணங்கள் இல்லாது இந்தோனேசியா செல்லமுடியாது எனவும் அடையாளஅட்டை விபரங்கள் வித்தியாசமாக இருந்ததால், விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டு , திரும்பவும் பஸ்ஸில் வெல்லம்பிட்டியாவுக்கு பஸ்லினாவின் சிறிய தாயின் வீட்டுக்கு வந்துள்ளனர்.
பின்னர் வாடகைக்கு வீடு ஒன்றையும் எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.
குறித்த வியாபாரியின் வங்கி அட்டையின் ரகசிய இலக்கம் வியாபாரி மூலமே தெரிந்து கொண்டதால், வாடகைக்கு வீடு எடுக்க ஒன்றரை லட்ச ரூபாவை வங்கியில் எடுத்ததாகவும், அதில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
திருகோனமலை உற்பட பல இடங்களில் இத்தம்பதியினர் ஒளிந்திருந்தாக பொலிசாருக்கு அவ்வப்போது தகவல்கள் வந்திருப்பினும், இத்தம்தியினர் திருகோணமலை செல்லவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இக்கொலையில் சம்பந்தப்பட்ட சடலம், தனது சகோதரன் இல்லை என வியாபாரியின் சகோதரிகள் கூறியுள்ளதால், DNA பரிசோதனையின் பின் மரண பரிசசோதனை சசெய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment