Recent Posts

Search This Blog

துருக்கிக்கு உதவிகளை வழங்க இலங்கை (,இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட குழு ) தயாராக உள்ளது ; அலி சப்ரி

Monday, 6 February 2023


துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.



தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு அனர்த்தங்களால், இதுவரையில் 4,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


No comments:

Post a Comment