Recent Posts

Search This Blog

I நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை..

Wednesday, 11 January 2023
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவக்கூடும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் சீரான வானிலையே காணப்படும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 ‐ 35 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான அத்துடன்  ஹம்பாந்தோட்டை தொடக்கம்  பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். 

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி. 



No comments:

Post a Comment