Recent Posts

Search This Blog

நாம் வெற்றி பெற்றவுடன் பேருவளை நகரத்தை தென்னிலங்கையிலேயே அழகான நகரமாகவும் அபிவிருத்தியடைந்த பிரதேசமாகவும் மாற்றியமைப்போம்.

Monday, 23 January 2023


பேருவளை நகரசபை தேர்தலில் இம்முறையும் சுயேச்சை அணியே வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த சுயேச்சை அணியின் தலைமை வேட்பாளர் அஸாம் பளீல், பேருவளை நகர மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து, தென்னிலங்கையிலேயே அழகான நகரமாகவும் அபிவிருத்தியடைந்த பிரதேசமாகவும் மாற்றியமைப்பேன் என தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபைக்கு முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.பளீல் ஹாஜியாரின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீலின் இளைய சகோதரருமான அஸாம் பளீல் சுயேச்சை அணி சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடுகிறார்.

வேட்பு மனு தாக்கல் செய்தபின் ஆதரவாளர் கள் மத்தியில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது; பேருவளை நகர சபை பகுதியில் தொடர்ந்தும் பல குறைபாடு களை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை உள்ளது. அதற்காக வேண்டி நான் நான்கு ஆண்டுகள் கொண்ட செயல் திட்டமொன்றை தயாரித்துள் ளேன். நகர மக்களினதும் அரசாங் கத்தினதும் அரச அதிகாரிகளினதும் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்து வேன்.

தூய்மையான அரசியல் மூலம் மக்கள் எதிர் பார்க்கும் சிறப்பான சேவைகளை பேருவளை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதே எனது ஒரே நோக்கமாகும்.

எனது தந்தை மர்ஹூம் பளீல் ஹாஜியார் நேர் மையான, தூய்மையான அரசியல் பணி மூலம் மக்களை சம்பாதித்தார். இன,மத,மொழி,கட்சி பேதமின்றியும் சேவை செய்தார். எனது தந்தை யின் வழியில் மக்கள் பணிக்காக இம் முறை தேர்தலில் குதித்துள்ளேன்.

எனது வெற்றிக்கு எனது சகோதரர் பாராளு மன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்பார். அவரது பன்முகப் படுத்தப்பட்ட நிதியையும் பேருவளை நகர அபி விருத்திக்கு பயன்படுத்துவேன் என்றார்.


No comments:

Post a Comment