Recent Posts

Search This Blog

மின்கட்டண பட்டியல் முறையாக கிடைக்காததாலே எனது வீட்டு மின் கட்டணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது ; அமைச்சர் கெஹலிய

Monday, 2 January 2023


தனது வீட்டு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு காரணம் முறையாக மின்கட்டண பட்டியல் கிடைக்காததே என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மின் கட்டணம் உரிய முறையில் கிடைக்கப்பெற்றவுடன் அதனை நிலுவைத் தொகையுடன் செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (02) இரவு தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்


No comments:

Post a Comment