Recent Posts

Search This Blog

தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு படுகாயம்.

Tuesday, 10 January 2023


(எஸ்.அஷ்ரப்கான்)

மட்டக்களப்பை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் கொழும்பிலிருந்து வந்த புகையிரதத்தில் இரவு 10.40 மணியளவில் இளைஞர் ஒருவர் அடிபட்ட நிலையில் பலத்த காயங்களுக்குள்ளான சம்பவமொன்று நேற்று இரவு இடம்பெற்றது.

கொழும்பிலிருந்து பி.ப.03.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை வந்தடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் தண்டவாளத்தின் அருகே நின்ற 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டதால் பலத்த காயங்களுக்கு உள்ளானார்.

இந் நிலையில் புகையிரதத்தில் பயணித்தவர்களின் துரித செயற்பாட்டினால் வைத்தியசாலையில் குறித்த இளைஞனர். அனுமதிக்கப்பட்டார்.

இவ்விபத்து
தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு
பொலிசார்
மேற்கொண்டு வருகின்றனர்.


No comments:

Post a Comment