Recent Posts

Search This Blog

பெண் ஒருவரை யார் சொந்தம் கொள்வது என்ற தகராற்றில் வர்த்தகர்கள் மீது துப்பாக்கிச் சூடு... மற்றொரு வர்த்தகர் கைது.

Saturday, 21 January 2023


ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே (அவரும் ஒரு வார்த்தகர்) கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபர் ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததும் அதே பெண்ணுடன் குறிப்பிட்ட வர்த்தகரும் தொடர்பு வைத்திருந்ததால் ஏற்பட்ட குரோதம் காரணமாக துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது தெரியவந்தது.

சந்தேகநபரின் துப்பாக்கி வவுலுகல பிரதேசத்தில் வெறிச்சோடிய காணி ஒன்றில் வைக்கோல் குவியலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.


No comments:

Post a Comment