குருநாகல், பொத்துஹெர-வடகட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட போலி தலந்த மாளிகையின் பத்திரிப்பு பகுதி தற்போது உடைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பத்திரிப்புவ என்ற கட்டடத்தின் கூரை தற்போது அகற்றப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்த போலியான பல்லக்கு ஆலயம் தொடர்பில் பெரும் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாகியுள்ள நிலையில், இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு மகாநாயக்க தேரர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி குற்றப் புலனாய்வு திணைக்கள குழுவொன்று நேற்று (07) குறித்த பகுதிக்கு சென்றுள்ளதுடன், தொல்பொருட்கள் சட்டத்தின் பிரகாரம் இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment