லாட்ஜ் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை கொள்ளுப்பிட்டி பொலிஸார் சுற்றிவளைத்து 5 வெளிநாட்டு பெண்களை கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (13) இரவு கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 38 வயதுடையவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் சனிக்கிழமை (14) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



No comments:
Post a Comment