Recent Posts

Search This Blog

I அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்..

Thursday, 15 December 2022
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நாளை முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் பொலநறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

கடல் பிராந்தியங்களில் 
****************************

வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று நிலைகொண்டுள்ளது.   இது மேலும் விருத்தியடைவதுடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்குத் திசையில் இருந்து மேற்குத் திசையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும். 

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு ஆழ்கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 ‐60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி பலத்த  காற்று வீசுவதுடன் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். 

ஆகையினால் குறிப்பிட்ட இக் கடல் பிராந்தியங்களுக்கு செல்லும்  மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மேலும்  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளிவிடப்படுகின்ற முன்னறிவிப்புக்களை கவனதிற் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். 

முல்லைத்தீவு  தொடக்கம் திருகோணமலை,  மட்டக்களப்பு, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி  மழை அல்லது இடியுடன் கூடிய மழை  பெய்யக்கூடும்.  

பொத்துவில் தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரையான அத்துடன் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார்,சிலாபம்  ஊடாக கொழும்பு  வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு  40 ‐ 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.

கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


No comments:

Post a Comment