சிறுநீரக கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (05) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மட்டக்குளி கஜிமாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் சிறுநீரக விற்பனை மோசடியில் பிரதான தரகராக செயற்பட்டு சிறுநீரகங்களை வழங்கியவர்களை ஒருங்கிணைத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் இன்று (06) புதுக்கட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்



No comments:
Post a Comment