ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த திரு.ஆஷு மாரசிங்க,
"இது சட்டத்தின் முன் உள்ள விவகாரம். இது பொய்யான விடயம். அதனால்தான் இதைப் பற்றி நான் கதைக்க விரும்பவில்லை. என் வழக்கறிஞர் இதைப் பற்றி பேசுவார்."
திரு ஆஷு மாரசிங்கவின் சட்டத்தரணி,
"திரு. ஆஷு மாரசிங்க தொடர்பாக மிகவும் கேவலமான, பொய்யான, எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், சில திரிபுபடுத்தப்பட்ட புகைப்படங்களை முன்வைத்து நேற்று செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது."
"எனது வாடிக்கையாளருக்கும் ஒரு நிறுவனத்தில் இயக்குநர் பதவியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கும் இடையே தகராறு உள்ளது. அந்த தகராறு காரணமாக எனது வாடிக்கையாளரிடம் அதிக அளவு பணம் கோரப்பட்டுள்ளது. அதுதான் இந்த சம்பவங்களின் பின்னணி."



No comments:
Post a Comment