Recent Posts

Search This Blog

உணவக உரிமையாளர் ஒருவர், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் சுட்டுக் கொலை.

Sunday, 18 December 2022


ஹங்வெல்ல பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதே பகுதியில் வசித்துவந்த 46 வயதுடைய உணவக உரிமையாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த உணவக உரிமையாளர் பாதுக்கை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்
பின்னர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், தப்பியோடிய சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


No comments:

Post a Comment