Recent Posts

Search This Blog

கண்டியை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் கடத்தப் பட்டு கடுமையாக தாக்கப்பட்டார்...

Wednesday, 14 December 2022


கண்டியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் தினுஷா லக்ஷன், குற்றவாளி குழு ஒன்றினால் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, உடலில் தீ வைத்துள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.


கண்டி ஆஸ்பத்திரி லேனில் உள்ள தனது இல்லத்தில் இருந்த தனது மகனை மோட்டார் சைக்கிள் தொடர்பான விடயம் தொடர்பில் பேசுவதற்காக வைத்தியசாலை லேன் சந்திக்கு நபர் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டதாக தினுஷா லக்ஷனின் தாய் தெரிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், சந்தியை அடைந்ததும், இரண்டு முச்சக்கர வண்டிகளில் வந்த சில நபர்கள் தினுஷ லக்ஷனை இரும்பு கம்பிகளால் தாக்கி கடத்தியதாக அவர் கூறினார்.

தாயார் மேலும் கூறுகையில்,

தனது மகனின் கையடக்கத் தொலைபேசி கிடைக்காததால் தனது உறவினர்களுக்கு அறிவித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

பின்னர் தினுஷ லக்ஷான் வெட்டுக் காயங்கள் மற்றும் தீக்காயங்களுடன் ஹன்தான விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தனிமையான பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டு மீட்கப் பட்டுள்ளார்.


தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு விசேட பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment