நாட்காட்டியிலுள்ள தினங்களை தனது அபார ஞாபகசக்தியினூடாக இனங்காணும் கல்முனை அஸ் ஸுஹரா வித்தியாலய நான்காம் தர மாணவன் நிஜாம் முஹம்மட் சாக்கிப்
அஸ்ஹர் இப்றாஹிம்
கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் மாணவன் நிஜாம் முஹம்மட் சாக்கிப் நாட்காட்டியில் தினங்களை அபார ஞாபக சக்தியினூடாக இனங்காணும் ஆற்றலை பெற்றுள்ளார்.
அவரது திறமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் திருமதி மஜீதியா தலைமையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆசிரியர்கள், ,பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றும் குழுவினர்கள் ,பழைய மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




No comments:
Post a Comment