Recent Posts

Search This Blog

மது போதையில் வாகனம் செலுத்திய பெண் கைது !

Wednesday, 21 December 2022

மது போதையில் சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்ற பெண் ஒருவரை நல்லதண்ணிய பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். 


மதுபோதையில் காரை ஓட்டி வந்த குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்து நேற்று ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர் , நீதிவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன், சாரதி அனுமதிப்பத்திரமும் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.


ஸ்ரீ பாத யாத்ரீகர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை புனித பிரதேசத்திற்கு கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



No comments:

Post a Comment