Recent Posts

Search This Blog

5 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

Tuesday, 13 December 2022


லங்கா சதொசவில் இன்று (14) முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒரு கிலோ பருப்பு 4 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 385 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோதுமை மா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 250 ரூபாவாகும்.

இதேவேளை, ஒரு கிலோ பூண்டு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 460 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெங்காயம் 9 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 190 ரூபாவாகும்
இதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் டின் மீன் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 490 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் எதிர்வரும் வாரத்தில் மேலும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment