தாழ் அமுக்கமானது வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து வடகிழக்காக சுமார் 370 km தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வருகின்ற 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கையை ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் தாக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் 26ம் திகதிவரையில் மழையும் காற்றுடனான வானிலையும் அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல்அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு, வடமேல், சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கடல் பிராந்தியங்களில்
****************************
வங்காள விரிகுடாவின் தென் மேற்குப் பகுதியில் திருகோணமலையிலிருந்து சுமார் 370 km தொலைவில் தாழ் அமுக்கம் நிலை கொண்டுள்ளதனால் மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் ஆழமான மற்றும் ஆழமற்ற பகுதிகளுக்கும் அத்துடன் வங்காள விரிகுடாவின் தென் மேற்கு கடல் பிராந்தியத்திற்கும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் படுகின்றனர்.
மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எதிர்காலத்தில் வெளிவிடப்படுகின்ற முன்னறிவிப்புக்களை கவனதிற் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிமழை பெய்யக்கூடும்.
கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் வடதிசையில் இருந்து வடமேற்குத் திசையை நோக்கி காற்று வீசும்.
மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55 ‐ 65 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும்.
நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பானநிலையில் காணப்படும்.
கலாநிதி மொஹமட் சாலிஹீன்,
சிரேஸ்ட வானிலை அதிகாரி.



No comments:
Post a Comment